இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சமூக சேவை, மருத்துவ சேவை, கல்வி சேவை, வட்டியில்லா கடன் உதவிகள், பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. மேலும் கோவையில் தனியார் கல்லூரியில் தமிழக குரல் இணையதளம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனமாக 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சேவைகளை பாராட்டும் விதமாக விருது வழங்கி கௌரவித்தனர். விழாவில் கலந்து கொண்ட ஜகாத் கமிட்டியின் உறுப்பினர்கள் பாகிருதீன் இஸ்மாயில் மற்றும் பைசல் ஆகியோர் இணைந்து தானிஷ் அகமது கல்லூரியின் முதல்வர் பார்த்திபன் கரங்களால் விருதை பெற்றுக் கொண்டனர் .

You must be logged in to post a comment.