நெல்லையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம்; பாராட்டு சான்றிதழ்கள் வழங்கல்..

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிதை வாசித்த அனைவரையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளின் கவியரங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இக்கவியரங்கத்தின் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் பேராசிரியை முனைவர் மாலிக் கவியரங்கத்தில் தலைமை வகித்தார்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் சிவசங்கரி, சிந்தியா, தீபராய் வர்ஷினி, பிரவிகா, பிலால் முகமது அலி, மரிய நிலஸ் ஜோஸ், சிந்து கவி, பேச்சியம்மாள், மாரியப்பன் ஆகியோர் கலைஞர் 100 என்கிற பொருண்மையில் கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை ஆட்சியர் (ஓய்வு) தியாகராஜன், நூலகர் அகிலன் முத்துக்குமார், மேகலிங்கம், மாணிக்கவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிதை வாசித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அருங்காட்சியகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. கவியரங்க நிகழ்ச்சியினை சவேரியார் கல்லூரி மாணவர் அண்ணாமலை ஒருங்கிணைத்து நடத்தினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!