தென்காசி நகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான கேடயத்தை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். ஆண்டு தோறும் சிறந்த கற்பித்தல், கற்றல், உள்கட்டமைப்பு, அதிக மாணவர்களின் சேர்க்கை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் தென்காசி சரகத்தின் 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு சிறந்த பள்ளிக்கான கேடயம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கல்வித்துறை முதன்மை செயலாளர் முன்னிலை வகித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேடயத்தினை வழங்க தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன், பள்ளித் தலைமையாசிரியர் கற்பகம், அறிவியல் ஆசிரியர் திருமலைக் கொழுந்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த விருதினை பெற ஆக்கமும் ஊக்கமும் அளித்த தென்காசி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் SSA பயிற்றுநர்கள், ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த விருது பெற உறுதுணையாக இருந்த தென்காசி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் சார்பில் நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









