கீழக்கரை சிறுவனுக்கு இளம் சாதனையாளர் விருது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான் மகன் 11 வயதான இன்சாப் முகமதுக்கு இளம் சாதனையாளர் விருதை குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.

இச்சிறுவன் கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் கேரளாவை சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்துள்ளார். அதனை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு மணி நேரமும் 11 நிமிடம் 14 வினாடி யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த  11 வயது இளம் சாதனையாளர் இன்சாப் முகமதுவை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி, மாவட்ட காஜி சலாவுதீன், கீழக்கரை அனைத்து ஜமாத் செயலாளர் ஷேக் உசேன், முகைதீனியா மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் பாதுஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!