கீழக்கரையில் கலைஞர் நினைவு மராத்தான் போட்டியில் 10கி.மீ தூரத்தை நிறைவு செய்த இளைஞருக்கு பாராட்டு மற்றும் பதக்கம்..

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA தொடங்கி வைத்தார்.

இந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாரத்தான் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 10 கிலோமீட்டரை நிறைவு செய்த கீழக்கரை MASA சமூக நல சங்கத்தின் முன்னாள் செயலாளரும்,  சமூக ஆர்வலருமான பரக்கத் அலிக்கு தொடர் ஓட்டத்தினை நிறைவு செய்தமைக்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை கீழக்கரை நகர் தி.மு.க மாணவரணி அமைப்பாளரும், மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளி தாளாளருமான இப்திகார் ஹசன் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் MASA வின் தலைவர் அகமது முகைதீன் உடனிருந்தார். மேலும் பரக்கத் அலி கடந்த ஒரு வருமாக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு தனது உடற்கட்டை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!