இருசக்கர வாகனத்தை தண்ணீரில் இயக்கி வரும் இளைஞருக்கு உயர்தமிழர் விருது

மதுரையைச் சேர்ந்த இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர் முருகன். 23 வயதுள்ள இவர் தற்போது ஒரு அரசு தொழிற் பயிற்சி கல்லூரியில் தொழிற் கல்வி பயின்று வருகிறார் .இவர் இருசக்கர வாகனத்தை தண்ணீரில் இயங்க வைத்து சாதனை புரிந்துள்ளார். ஏதாவது சாதிக்க வேண்டும் அதுவும் அறிவியல் துறையில் தன்னுடைய சாதனை இருக்க வேண்டும் எனக் கருதிய முருகன் மூன்றாம் வகுப்பு முதல் தற்போது வரை பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரை பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தை இயக்குகிறார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கி கூறுகிறார். தற்போது இந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் வில் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் 2019 ஆம் ஆண்டிற்கான உயர் தமிழர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை வில் நிறுவனத்தின் நிறுவனர் & தலைவர் டாக்டர் கலைவாணி, முதன்மைச் செயலர் டாக்டர்.தஹ்மிதா பானு மற்றும் ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்தீன் ஆகியோர் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று அவருடைய கண்டுபிடிப்பை பார்வையிட்டு விருதினை வழங்கினர். இந்த விருதை பெற்றுக் கொண்ட முருகன் கூறியதாவது தன்னுடைய தொடர் விடாமுயற்சியின் மூலம் கண்டுபிடித்த கருவிகளின் பலனாக உயர் தமிழர் விருது கிடைத்துள்ளது.இவ்விருதினை பெற்றிறுப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார். தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாக தன் வீடு தேடி வந்து தன் திறமையை கௌரவித்தமைக்காக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!