மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 25.02.19 திங்கள் அன்று சிறப்பாக நடைபெற்றது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அக்குழுவின் தலைவர் E.M.சுதர்சன் நாச்சியப்பன் M.A.B.L.Ph.D. அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புளியங்குடி வரி செலுத்துவோர் சங்கத்துக்கு த.அ.உ.சட்டம் வாயிலாக அதிகமான கேள்வி கேட்டமைக்கான விருதுகள்,மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
தமிழகம் முழுவதிலிருந்து 100 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், சட்டம் கற்றவர்கள் கலந்து கொண்டனர். அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சம், ஊழல், திருட்டு ஆகியவற்றை களைய ஊழலற்ற அதிகாரம், ஆட்சி அமைய தகவல் அறியும் உரிமை சட்டம் தனிமனித ஆயுதம்.
அதனை பயன்படுத்தி பொதுமக்கள் பயன் பெறவேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.