மதுரையில் தென்னிந்திய யோகா வளர்ச்சி கழகம் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 2 வயது சிறுவன் பிரணவ் பத்திற்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காண்பித்து முதல் பரிசு பெற்றார் .இச்சிறுவன் ஒரு வயது முதலே தன் பெற்றோரால் யோகா சிறு சிறு பயிற்சிகளின் மூலம் வளர்க்கப்பட்டவன். பெரியவர்கள் செய்து காண்பிக்க யோசிக்கும் ஆசனங்களை இச்சிறுவன் சிறுவயதிலேயே விளையாட்டுத்தனமாக செய்து காண்பிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மேலும் இச்சிறுவன் கடந்த வருடம் தன்னுடைய இத்தகு வியக்கத்தக்க திறமைக்காக முகவை ரெக்கார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் இவற்றில் இடம்பிடித்த சாதனையாளன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனின் இத்தகைய யோகா திறமைக்காக கடந்த வாரம் கோவையில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் சிறுவனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது கூடுதல் செய்தி.





You must be logged in to post a comment.