ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி பயன்பெறுமாறு தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச் செயலாளர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச்செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார்.
கூட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்குவதை தவிர்த்து, உள்ளூர் கடைகளில் வாங்கி பயன்படுத்த முன் வரவேண்டும். வியாபாரிகள் பயன்பெறும் வகையில் இரவணசமுத்திரம் விலக்கு அருகில் தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கையா, பிச்சையா, காதர், சேட் என்ற யூசுப், குமார், அலி, முகைதீன் பிச்சை, ஷபிக், சண்முகராஜ், மைதீன், ராஜா, காமராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.