அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்த காளைகள்1000! வீர்ர்கள் 486 பங்கேற்பு! இதில் 53 பேர் தகுதி நீக்கம்..
புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது
அவனியாபுரம் கிராமத்துக் கமிட்டியினர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த நீதிமன்ற முத்திரை விட்டது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் 28. 37 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன
தகுதி சான்றிதழ் பெற்ற காளை மாடுகள் மற்றும் மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் 2400 பேர் வார காளைகளும் 1318 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்தனர் இதில் குலுக்கல் முறையில் 1000 காளைகளுக்கும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து நேற்று காலை 7 மணி அளவில் வணிக வரி துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. இதில்
எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பூமிநாதன்
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் மதுரை ஆணையாளர் மதுபாலன், மதுரை காவல் ஆணையாளர் லோகநாதன், மேற்கு மண்டல தலைவி சுவிதா, விமல் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாடுபிடி
வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என
10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் காளைகள் பங்கேற்றன.
மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு50 பேர் என 400 பேர் களமிறங்கினர்
கால்நடை துறை சார்பில் இணை இயக்குனர் நடராஜ் குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒன்பது குழுக்கள் காளைகளுக்கு பரிசோதனை செய்து அவற்றை களத்தில் இறக்கி விட்டனர் 2 கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இயங்கின.
21 காளைகள் போலி டோக்கனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
அதேபோல் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி வினோத் தலைமையில் 150 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர்
காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர் மேலும் எலும்பு முறிவு கண்டறிய முதன் முறையாக அறிய நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது
12 ஆம் பூலன்ஸ் 2 பைக் ஆம்பூலன்ஸ்
தயார் நிலையில் இயங்கின.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையாளர்கள் பத்து உதவி ஆணையாளர்கள் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு நீர். மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது
மாடுபிடி வீரர்கள் 18 பேர் மாடு உரிமையாளர்கள் 24 பேர் போலீசார் 2 பேர் பொதுமக்கள் 2 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்தனர் இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல் பரிசாகமாடுபிடி வீரர் அவனியாபுரம்
கார்த்திக் 17 காளைகளை அடக்கி கார் மற்றும் கோப்பையை அமைச்சர்கள் மூர்த்தி , பழனி வேல் தியாகராஜனிடம் இருந்து பெற்றார்மேலும் அவருக்கு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் சார்பாக கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. 2ம் பரிசு அவனியாபுரம் ரஞ்சித்குமாருக்கு பீரோ மற்றும் சைக்கிள்
3ம் பரிசாக அதே போல் சிறந்த காளைக கான முதல் பரிசாக அவனியாபுரம் ஜி ஆர் கார்த்திக் காளைக்கு காரும் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. 2ம் பரிசு திருப்பரங்குன்றம் சீனிவேல் காளைக்கு பீரோ கட்டில் வழங்கப்பட்டது மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காலை உரிமையாளர்களுக்கு ரொக்கம் தங்க காசு பேன் கட்டில் பீரோ அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









