இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நோ பார்க்கிங்கில் நின்ற ஆட்டோவை உடைத்து ஓட்டுனரை தாக்கிய போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வாரச்சந்தை நாளான இன்று (27.10.18) கூட்ட நெரிசலில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து அதன் ஓட்டுனரை தாக்கியதால் ஓட்டுனர் காயமடைந்தார்.
ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பப்டதால் ஆவேசமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பு ஆய்வாளர்கள் சாரதா, விஜயபாஸ்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாயல்குடி பேருந்து நிலையத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர் சமாதானத்திற்கு பிறகு சகஜ நிலைக்கு அப்பகுதி திரும்பியது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.