கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த தானம்

நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நலச் சங்கத்தின் ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமான பொது சேவை செய்து கொண்டு வருகிறார்கள். தற்போது வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் இரத்த வங்கியில் போதுமான ரத்தம் இல்லாத காரணத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபரேஷன் செய்யகூட இரத்தம் பற்றாக்குறையாக இருக்கிறது என்று வேலூர் மாவட்ட நம்நாடு நமதுஉரிமை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பு வந்திருக்கிறது

உடனே நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர்களும் உடனடியாக விரைந்து இரத்த வங்கிக்கு சென்று இரத்தம் வழங்கி இருக்கிறார்கள்.குருதி வழங்கியவர்கள்:-Ckகமல், M.தன்ராசு, M.தரணீஸ்வரன், J.பரந்தாமன், C.சிவசங்கர், நாகராஜ், மற்றும் வினோத்.இரத்தம் வழங்கிய அனைத்து ஓட்டுநர்களையும் மாநில தலைவர் சாகுல் ஹமீது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கொரோனோ தொற்று காலத்திலும் இவர்கள் ரத்தம் வழங்கிய செயலை மருத்துவர்கள் வேலூர் மாவட்ட பொது மக்கள் எனஅனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!