தொண்டி அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு இருவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை மஞ்சகரிச்சான் கண்மாய்க்குள் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு ஜூலை 14 ஆம் தேதி பிணமாக கிடந்தார். அந்த உடலை, தொண்டி போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், முகிழ்தகம்  கருப்பையா மகன் ஆட்டோ டிரைவர் அஜித்குமார் , 22 என தெரிந்தது. இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அஜித்குமார் உடலை வைக்கப்பட்டது. கொலைளிகளை கைது செய்யக் கோரி அஜித்குமார்

உடலை வாங்க மறுத்து அவரது உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . போலீசாரின் சமரசத்தையடுத்து கலைந்து சென்றனர். திருவாடானை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். போலீசாரின் பல்வேறு கோண விசாரணையில் , தலைமறைவாக இருந்த நய்னா முகமது 22, திருத்துறைபூண்டி ராஜகுரு 21 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து தங்க செயின் கைப்பற்றினர். கொலை தொடர்பாக குற்றவாளிகள் கூறுகையில் நகைக்காக கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் இவர்கள் தொடர்புடையவர்களாக எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!