இராமநாதபுரம், ஆக.10- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் 21 வார்டுகளில் உரிய பராமரிப்பின்றி சுற்றி திரிந்த 46 கால்நடைகள் ஆக 2ல் பிடிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதில் ஆக.5 அதிகாலை 4:30 மணியளவில் 19 மாடுகள் அடையாளம் தெரியாதவர்களால் விடுவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இரவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எஞ்சிய 27 கால்நடைகளில் அபராதம் ரூ 24 ஆயிரம் செலுத்தி 15 கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மீட்டுச் சென்றனர். மீதமுள்ள 12 கால்நடைகள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது. ரூ 52 ஆயிரத்து 700க்கு ஏலமிப்பட்டு கால்நடைகள் விடுவிக்கப்பட்டன. 27 கால்நடைகள் மூலம் ரூ.76 ஆயிரத்து 700 வருமானம் ஈட்டப்பட்டு நகராட்சி கருவூலகத்தில் செலுத்தப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









