புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.! தொழுகை விடாமல் இடையூறு செய்வதால் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .!!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள் மஸ்ஜிதே நூர் ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்டு சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் மீனவத் தொழில் செய்து வருகின்றனர் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருப்பதால் பெருநாள் தொழுகை தொழுவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் 33 ஆண்டு காலமாக ஈத்கா மைதானம் திடல் அமைப்பு பெருநாள் தொழுகை தொழுது வருகின்றனர்.
சமீபகாலமாக சிலர் இந்த இடத்தில் தொழுகை செய்ய விடாமல் இடையூறு செய்து வருகின்றனர் மேலும் இந்த அரசு நிலத்தை தனி நபர்கள் கையாடல் படுத்துவதற்கு முயற்சி செய்து பல இடையூறுகளை செய்து வருகின்றனர். எனவே இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை வைக்க அனுமதி தர வேண்டும் என்றும் மேலும் ‘நமக்கு நாமே திட்டத்தில்” மரக்கன்றுகள் குறுங்காடுகள் அமைப்பதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி தர கோரியும் புதுமடம் ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோனிடம் மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.