நெல்லை மாவட்டம் கரிவலத்தில் திருமண விவகாரத்தில் அரிவாள் வெட்டு..

நெல்லை மாவட்டம் கரிவலம் போலீஸ் சரகம் மலையடிபட்டியை சேர்ந்தவர் திருப்பதி(35). இவர் தனது மூத்த சகோதரி மகள் பெண் காவலர் முத்துமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் திருப்பதியை பிரிந்து சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது 2-வது சகோதரி மகள் பெண் காவலர் முத்துநாகவள்ளி என்பவரை திருமணம் செய்ய திருப்பதி திட்டமிட்டுள்ளார்.

ஆனால் முத்துநாகவள்ளி அதே ஊரைச் சேர்ந்த மாரிஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் செங்கல்பட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் கணவரை பார்ப்பதற்காக முத்துநாகவள்ளி ஊருக்கு வந்துள்ளார்.

ஏற்கனவே முத்துநாகவள்ளி தன்னை ஏமாற்றி விட்டார் என்ற கோபத்தில் இருந்த திருப்பதி கணவன் மனைவி ஜோடியாக வருவதைப் பார்த்த ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து மாரீஸ்வரன் தலையில் ஓங்கி வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கரிவலம் போலீசார் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!