விருதுநகர் கீழக்கடைத் தெருவில் மருந்துக்கடை நடத்திவருபவர் ரமேஷ்(62). மருந்துக்கடையுடன் நோட்டுகள், பேனா, பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
தற்சமயம் விருதுநகர் மாவட்டத்தில் மூன்று மணி வரை மட்டுமே கடைகள் திறப்பது என்ற வணிகர் சங்க அறிவிப்பின்படி ரமேஷ், மதியம் கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த நபர் நோட்புக் வேண்டும் என்று கேட்டுள்ளார். பூட்டிய கடையை ரமேஷ் திறந்து கொண்டிருந்த போது, அந்த
மர்ம நபர் ரமேஷின் பின்பக்கமாக நின்று கொண்டு, அவரின் தலையின் பின் பகுதியில், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு, ரமேஷ் கையில் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டான். படுகாயத்துடன் ரமேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
உடனடியாக அந்தப்பகுதிக்கு வந்த போலீசார், மர்ம ஆசாமி தப்பியோடிய பகுதிகளிலிருந்த கடைகள், வீடுகளிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, மர்ம ஆசாமியை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். கேமராவில் பதிவான மர்ம ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.