இராமநாதபுரம் நகராட்சியின் 31வது வார்டின் முன்னாள் கவுன்சிலரும், டி.டி.வி.அணியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான தவமுனியசாமி இன்று (25-04-2018) அரிவாளால் தாக்கப்பட்டள்ளார்.
இன்று காலை சிதம்பரம் பிள்ளை வாய்க்கால் ஊரணி அருகில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாத 4 நபர்களால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். சம்பவம் நடைப்பெற்ற பொழுது அங்கிருந்த ஏனைய மக்கள் அவரைக் காப்பாற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த தலைமையில், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கவிதா, ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், கீழக்கரை நகர்செயலாளர் கே.ஆர்.சுரேஷ், கே.ஜி.பாலமுருகன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு இராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இராமநாதபுரத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











