இன்று (22/05/2019) காலை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மருதுபாண்டியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் திருமங்கலம் அரசு மருத்துவமனை மயக்கவியல் டாக்டர் சாலமன் செய்தியாளர்களை, அதை படமெடுக்க முயற்சித்த செய்தியாளர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித்துள்ளார். இது சம்பந்தமாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இதே மருத்துவர் சார் கடந்த வருடம் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளரை தாக்கியதாக காவல் புகார் அளிக்கப்பட்டு மன்னிப்பு கூறியதன் அடிப்படையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களை தாக்க முயற்சித்த சம்பவம் திருமங்கலம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





You must be logged in to post a comment.