மதுரையில் இந்து முன்னனி மற்றும் பாஜக கட்சியினர் கமல் மீது காலணி வீச்சு..

இந்துக்களை பற்றி இழிவாக பேசியதாக இந்து முன்னனி மற்றும் பாஜகவின் பிரிவான அனுமன் சேனா கட்சியை சேர்ந்தவர்கள் கமல்ஹாசன் மீது செருப்பை வீசியுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சி தலைவர் கமலஹாசன்  திருப்பரங்குன்றம் 16 நகால் மண்டபம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சில நபர்கள் செருப்பை வீசியுள்ளனர்.

இது மேடையின் அருகே கீழே விழுந்தது, ஆனால் அவர் மேலே படவில்லை. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் காலணி வீசியவர்களை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!