இராமநாதபுரத்தில் பாஜக., வுக்கு தேர்தல் பணி செய்த வாலிபர் மீது தியேட்டரில் சரமாரி தாக்கு.. 2 பவுன் பறிப்பு..

இராமநாதபுரம் ஆர். எஸ்.மடையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பகவதி குமார், 23. இவர் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ., வுக்கு பணியாற்றினார்.

இந்நிலையில், இவர் ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தார். இடைவேளையின் போது, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரகு, கார்மேகம் ஆகியோர் பகவதி குமார் அருகே வந்தனர். உன்னை அடித்தால் யார் வந்து கேட்பார் என கூறியபடி பகவதி குமார் கன்னத்தில் இருவரும் அறைந்து கீழே தள்ளினர். நிலை தடுமாறி கீழே விழுந்த பகவதி குமாரை, ரகு மற்றும் கார் மேகத்துடன் படம் பார்க்க வந்த நண்பர்கள் சரமாரி தாக்கினர். மேலும், பகவதி குமார் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து கேணிக்கரை போலீசில் பகவதி குமார் புகார் கொடுத்தார். இதன்படி, ஆர். எஸ்.மடை பாலசுப்ரமணியன்கள் மகன் ரகு, கார்மேகம், பாலசுப்பு மகன் மதன்குமார், சுந்தரம் மகன் திருமுருகன், முனியசாமி மகன் செந்தில் உள்ளிட்ட சிலர் மீது 4 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!