உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவனுக்கு, ஆ. ராசா வலியுறுத்தல்..

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவனுக்கு, ஆ. ராசா வலியுறுத்தல்..

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்து களைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சர் உதயநிதியைக் குறிவைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?’ என்ற கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், விசிக கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அவரின் கருத்துகள் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத் தில், நீலகிரி தொகுதி எம்.பி.யும்,திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கூறியதாவது:

கூட்டணி அறத்துக்கு மாறாக… மதவாதத்தை ஒழித்து, சமூகநீதியைக் காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். இந்தச் சூழலில் அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. விசிக இயக்கத்துக்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதை பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடு தலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்.

அதேபோல், கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்துக்கு சரியாக வராது. இதுபோன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவுக்குத் துணை போகிறார்கள் என்று எண்ணக்கூடிய வர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணை பொதுச்செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!