தினசரி உள்ளூர் மருத்துவர்கள் சுமார் 40 ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளைச் சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் அதிகமானோர் ஆண்களாக உள்ளனர். குழந்தைகளை ஆஸ்துமா தாக்குவதும் அதிகரித்து வருவதாகவும் , ஒவ்வொரு மாதமும் சுமார் 25 – 30 குழந்தைகளுக்கு புதிதாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறார்கள் , அதேவேளையில் ஒவ்வொரு ஆண்டும் காசநோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நுரையீரல் சிகிச்சை நிபுணர் வேல் குமார் கோபால் பேசியதாவது : மக்களிடம் ஆஸ்துமா மற்றும் சுவாச சிகிச்சை தொடர்பாக உள்ள தவறான புரிதல்களை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம், மக்களின் வாழ்க்கையில் ஆஸ்துமாவின் தாக்கததைக் குறைப்பதில் சுவாச சிகிச்சை முக்கிய பங்களிக்க முடியும் என்ற நிலையில் , மூச்சி உள்ளிழுத்தல் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் நேரடியாக நுரையீரலைச் சென்றடைகினறன. பரிந்துரைக்கப்படும் சுவாச் சிகிச்சையை நோயாளிகள் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே நோயின தீவிரத்தைக் குறைக்க முடியும். மேலும் சுவாச சிகிச்சையில் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதுடன், அவை மேலும் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் சரி செய்ய முடியும். இருப்பினும் நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது முக்கியமாகும்.
ஆஸ்துமா ஏற்பட முக்கியக் காரணிகளாக காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், குழந்தைகளுக்கு தவறான சிகிச்சை அளித்தல், புகைப்பிடித்தல் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சலும், அதை முறையாக கவனிக்காமல் விடுவதல் போன்றவை கருதப்படுகிறது. நோயாளிகள் இன்ஹேலர்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மருந்துகளின் விலை, பக்க விளைவுகள், இன்ஹேலர் சாதனங்கள் குறித்த தவறான கருத்துகள் ஆகிய பல்வேறு காரணங்கள் உள்ளன.
மேலும் மனநிலை சார்ந்த பிரச்சினைகளும் நோயாளிகள் மருத்துவர்கள் மீது அதிருப்தி கொள்ள காரணமாக உள்ளது. அதனாலும் சிகிச்சையைத் தொடாவது பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒருநாளுக்கான இன்கலேசன் தெரபிக்கான செலவு ரூ 4 முதல் 6 மட்டுமே. அதனால் ஒரு ஆண்டுக்கான செலவு ஒரு நாள் மருத்துவமனையில் தங்கும் செலவைக் காட்டிலும் குறைவே. எனவே ஆஸ்துமாவை எதிர்கொள்வதற்கு போதிய விழிப்புணர்வு பெறுவதும் சரியான சிகிச்சை முறையை பெற்றுக் கொள்வதும் மருத்துவர்களின் ஆலோசனையை உரிய முறையில் பின்பற்றுவதும் மிகவும் அவசியத் தேவையாகி உள்ளது. என்று கூறினார்.
கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









