இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ.1.40 லட்சம் மதிப்பில் 26 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 640 பேர் மனு அளித்தனர்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு சலவை பெட்டி, தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் 5 பேருக்கு தாட்கோ சார்பில் கல்வி உதவித்தொகை காசோலை என 26 பேருக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் கல்யாணசுந்தரம், தாட்கோ மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!