இராமநாதபுரத்தில் மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு நிவாரணம்..

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கணேசன், 45. பட்டதாரியான இவர் காட்சி ஊடகங்களில் கடந்த 13 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றினார். ராஜ் , மதிமுகம் டிவி., யில் ஒளிப்பதிவாளராகவும், மூன் டிவி. செய்தியாளராகவும் பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்த இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி மறைந்தார் .

இவரது குடும்பத்திற்கு ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.27 ஆயிரம் நிவாரண நிதியை ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.தனபாலன், செயலர் கே.கே.குமார், பொருளாளர் ஜி.மகேஸ்வரன் ஆகியோர் வழங்கினர். சங்க மூத்த உறுப்பினர்கள் எஸ்.ரெத்தினக்குமார், எல்.பாலச்சந்தர், பி.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!