மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் பெறுவது எப்படி.???

தமிழக முதல்வர் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை கருதி தமிழகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார்.

இந்த நிவாரண நிதியை பெற மாற்றுத்திறனாளிகள்  அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி  (V.A.O) மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான ஒரு கூப்பன் வழங்குவார். இந்த கூப்பனை தங்கள் பகுதிக்கு உள்பட்ட நியாய விலை கடைகளில் கொடுத்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.

கீழக்கரை மற்றும் சுட்டுவட்டார பகுதியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் இது சம்பந்தமாக வழிகாட்டுதல் தேவை என்றால் கீழ்க்கண்ட இந்த எண்களில் அலைபேசியில் தொடர்ப்புக்கொண்டால் அவர்களுக்கான வழிகாட்டுதல் செய்ய காத்திருக்கின்றோம்.

9443358305 9677640305 9791742074 8610851630 7550351941 9791741708 9944172759

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!