தீ விபத்தில் உடமைகளை இழந்த தங்கச்சிமடம் மீனவருக்கு திமுக., உதவிக்கரம்..

இராமநாதபுரம் மாவட்டம்  தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் ரொனால்ட். இவரது கூரை வீட்டில் 06.6.2020ல் ஏற்பட்ட மின் கசிவு தீ விபத்தில் குடிசை வீட்டில் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1.03 லட்சம், தங்க மோதிரம் 6, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், இரு சக்கர வாகன ஆவணங்கள், ரேஷன் கார்டு , ஆதார் கார்டு, கல்வி அசல் சான்றுகள் மற்றும் ஆடைகள் உட்பட அனைத்தும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

இது குறித்து ராமேஸ்வரம் வருவாய் துறையினர் விசாரித்தனர். இந்நிலையில், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் மீனவர் ரொனால்ட் வீட்டிற்கு சென்றார். அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். ஒரு வார கால சமையலுக்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறி தொகுப்பு வழங்கினார். வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உறுதியளித்தார், ஊராட்சி தலைவர் குயின்மேரி, ஊராட்சி திமுக செயலர் எஸ்.கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!