இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இருவருக்கு நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் கொ வீரராகவ ராவ் இன்று (30/05/2020) வழங்கினார்.
அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3,64,874 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை,
நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









