ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகளில் 15 கிராமத்தில் உள்ள 5500 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகளான அம்மாபட்டி,வலையபட்டி,லட்சுமியாபுரம், நத்தம்பட்டி உள்ளிட்ட 15 கிராமத்தில் உள்ள 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோணா நிவாரணமாக அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, வத்திராயிருப்பு அதிமுக சேர்மன் சிந்துமுருகன் அவர்கள் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








You must be logged in to post a comment.