மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு டிராக்டர் மற்றும் இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்ததை அடுத்து 144 தடை உத்தரவு சற்று விளக்கப்பட்டுள்ள நிலையில் கட்டிடப் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஆனால் கட்டிடப் பணிக்கு தேவையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான ராக்காச்சி அம்மன் கோவில் அய்யனார் கோவில் பகுதி போன்ற ஆற்றுப் பகுதிகளில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது செண்பகத்தோப்பு ரோடு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அம்மன் பொட்டல் தெருவைச் சேர்ந்த பாண்டி என்ற கழுதை பாண்டி ,பிஎஸ்கே மாலையா புரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த நீராத்துலிங்கம், சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா ,ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர் இரண்டு மாட்டு வண்டி உட்பட மணல்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!