ஆண்கள் மட்டுமே கோலோய்ச்சும் பல்வேறு துறைகளில் பெண்களும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியாவிலேயே முதல் பெண்மணியாக டீசல் இன்ஜின் ரயிலை இயக்கி சாதனை படைத்து வரும் முஸ்லீம் பெண்மணி மும்தாஸுக்கு மகளிர் சக்தி விருதினை மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

தற்போது 43 வயதை தொட்டு விட்ட மும்பை நகரத்தை சேர்ந்த மும்தாஸ் சிறுவயது முதலே ரயில் மீது கொண்ட காதலால் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் துணை ரயில் ஓட்டுநர் ஆனார். அந்தச் சமயத்தில் ரயிலுக்கு பிரசித்தி பெற்ற ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கூட பெண் ரயில் ஓட்டுநர்கள் கிடையாது. கடந்த 1995ம் ஆண்டு ‘லிம்கா’ புத்தகத்தில் மும்தாஜ் இடம் பிடித்தார்.

அதே போல் 2015 ஆம் ஆண்டு இரயில்வே ஜெனரல் மேனஜர் விருதும் தேடி வந்தது. தற்போது, மும்பை மத்திய புறநகர் ரயில்வேயில் மோட்டார்வுமனாக பணியாற்றி வருகிறார். இந்தியாவிலேயே பெரியதும், அதிக ரயில் போக்குவரத்து நெரிசலும் கொண்ட பாதையாக இது இருக்கிறது. தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிவாகை சூடி இருக்கும் சாதனை பெண்மணி முத்தாஸுக்கு இன்னும் பல விருதுகள் காத்துக் கிடக்கிறது… நாமும் வாழ்த்துவோம்….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










I congratulations for mumthaz