ராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது கோவை ரவி சாஸ்திரி குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு துவங்கியது அதனை தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் குழுவையிட்டு மேள தாளத்துடன் கடம் பறப்பாடு நடைபெற்ற பொழுது கருட பகவான் வானில் வட்டமிட்டது வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க ஸ்ரீ புல்லானி மாரியம்மனுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது திருப்புல்லாணி சேதுக்கரை கீழக்கரை ரகுநாதபுரம் ராமநாதபுரம் வழுதூர், திரு உத்தரகோசமங்கை ,பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சார்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.