பனைக்குளம் பகுதியில் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா !ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள சோகையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது சுந்தர் ராஜ பெருமாள் ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேத விற்பனர்கள் முருகன் சுந்தரம் உள்ளிட்ட குழுவினர்களால் யாக சாலை பூஜை நிகழ்வு மற்றும் கணபதி பூஜையுடன் துவங்கியது. கடம் புறப்பாடு விழா மேளதாளத்துடன் நடைபெற்றது ஏராளமான ஆன்மீக பக்தர்கள் குலவை யிட்டு கடம் புறப்பாட நிகழ்வு நடைபெற்ற போது ஆலயத்தின் மேலே கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியது இதனை தொடர்ந்து பக்தர்களின் அருள் பாலிப்போடு அனைத்து ஆலயங்களுக்கும் வேத விற்பனர்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தனர் இதனைக் காண, மொட்டையன் வலசை உடைச்சியார் வலசை ஆலாபுளி ஏந்தல் வழுதூர், அளம், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், பனைக்குளம் சோகையன் தோப்பு அழகன் குளம் ஆற்றங்கரை பொன்குளம் பெருங்குளம், ராமநாதபுரம் உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், கும்பாபிஷேகத்திற்கு பின்பு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் ஆன்மீக பக்தர்களுக்கு அருள் பாலித்தது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!