கீழக்கரை மேலத்தெரு, அருஸியா தைக்காவில் பட்டமளிப்பு விழா..

கீழக்கரை மேலத்தெரு, அருஸியா தைக்காவில், திருகுர்ஆன் மனனம் செய்யும் ஆலீம் படிப்புடன், உலக கல்வியையும் 1998 ஆண்டு முதல்  இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. இங்கு 60 பேர்களுக்கு மேல் படிக்கிறார்கள்.

இன்று (22.07.18) மாலை தைக்காவில் கல்வி பயிலும் 3 மாணவர்கள் ஆலீம் பட்டம் பெற்றார்கள். (முகம்மது அசாருதீன் BCA,மதுரை, முகம்மது காசிம் BE வெளிப்பட்டிணம், அக்பர் அலி MBA வேதாளை.). மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் தைக்கா டிரெஸ்ட்டி K.T.M பசீர் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஹாஜி சலாவுதீன்,மேலத்தெரு கத்தீப் மன்சூர் ஆலீம், அப்துல் சலாம் ஆலீம், ஆரீப் ஆலீம்,ரசீது ஆலீம் மற்றும் ஜமாத்தார்கள், பட்டம் பெறும் குடும்பத்தார்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தகவல் : மக்கள் டீம் :

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!