தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் “கலைத் திருவிழாவினை” 26.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கொண்டு கலைகளை மாணவர்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கவின் கலை, நுண்கலை, இசை, கருவி இசை, இசை சங்கமம், நாடகம், நடனம் மற்றும் மொழித்திறன் வகைகள் என ஒன்பது கலை இனங்களின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கலை, இலக்கியப் போட்டிகள் “கலைத் திருவிழா” என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 6-8, 9-10, 11-12. என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் என நான்கு அளவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலை அரசன், கலை அரசி என்ற பட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டிற்கும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 26.10.2023 அன்று தொடங்கியது. கடையநல்லுார் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற விழாவினை மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.முத்தையா வரவேற்புரை ஆற்றினார். மேலும் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் S.தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஞா.அருளானந்தன், புதுக்குடி ஊராட்சித் தலைவர் இ.கஸ்தூரி இன்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் S.சிவலமுத்து நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜா.சுகந்தி மற்றும் பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். தொடக்க நாளில் 11-12-ஆம் வகுப்பு பிரிவு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. இதில் 1500க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ- மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் 27.10.2023 அன்று 9-10 ஆம் வகுப்பு பிரிவு மாணவர்களுக்கும், 28.10.2023 அன்று 6-8 ஆம் வகுப்பு பிரிவு மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












