இராமநாதபுரம், அக்.19- இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவங்கின.
ராமநாதபுரம் வட்டார அளவிலான போட்டிகள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்டபம் வட்டார அளவிலான போட்டிகள். உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி கலையரங்கில் துவங்கின. ராமநாதபுரம், வட்டார அளவிலான கலைப் போட்டிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராமநாதன், மல்லிகா, மண்டபம் வட்டார அளவிலான கலைப் போட்டிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை துவக்கி வைத்தனர். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்ப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, மரக்கன்று வளர்ப்பதன் அவசியம் உள்பட 40 தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நடுநிலை வகுப்புகளுக்கான போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. உயர்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கான போட்டிகள் இன்று நடந்து வருகின்றன. மேல்நிலை வகுப்பு மாணாக்கருக்கு நாளை (அக் 20) நடைபெற உள்ளது
அக்.21 ல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இப்போட்டிகளில் முதல் இடம் பிடிப்போர் அக் 26, 27, 28 ல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர். நவ 21, 22, 23, 24 ல் மாநிலப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மண்டபம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் குமுதா, கஜலட்சுமி, முருகன், வீரஜோதி, மாலதி, தமிழ்மலர், வனிதா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.


You must be logged in to post a comment.