தமிழகம் முழுவதும் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தென் மாவட்டங்களில் எதிப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள முருகன் கோவில் முன்பு இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் நேதாஜி தலைமையில் பிரமலைக்கள்ளர் கள்ளர் பள்ளிகளின் மாணவர்களும் வழக்கறிஞர் சங்கத்தினர் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களும் அரசு வழக்கறிஞர்கள் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து கவனஈர்;ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

You must be logged in to post a comment.