ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு சார்பு ஆய்வாளரான இராமகிருஷ்ணன் என்பவர் முதலில் ரூ.3000/- இலஞ்சமாக கேட்டு அதற்க்கு அவர் தர மறுக்கவே பின்னர் ரூ.2000/-மாவது கொடுக்கும்படி கெஞ்சி கேட்டுள்ளார். இந்நிலையி்ல் இலஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸில் புகார் செய்தார். இலஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய ரூ.2,000/- கொடுத்து மேற்படி இராமகிருஷ்னை சந்திக்க அறிவுரை வழங்கி தொண்டி பகுதியில் அங்காங்கே மறைந்து இருந்தனர். இதனையடுத்து, பைக்கில் வந்து இலஞ்சம் வாங்கியதை உறுதி செய்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மருதமலை திரைப்பட பாணியில் லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது .

You must be logged in to post a comment.