திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் 21.02.19 அன்று மாலை கோட்டூர் ஆவரம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் அவரது மனைவி சசிகலா (35) மற்றும் மகள் பூவிதா (13) இருவரை அரிவாளால் வெட்டியதில் சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகள் பூவிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன் அவர்கள் தலைமையில் காவலர்கள் விரைந்து செயல்பட்டு கொலையாளியை நான்கு மணி நேரத்தில் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
படம்;:- உதவி ஆய்வாளர்& தலைமைக்காவலர்


You must be logged in to post a comment.