திகுச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் போலீசார் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்விடத்தை கடக்க முயன்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் பட்டா கத்தி, நீண்ட அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொங்கராயர் குறிச்சி வேத கோயில் தெருவைச் சேர்ந்த அன்புபட்டு ராஜன் 45, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருசேகளத்தூர் விக்னேஸ்வரன் (25), இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே நரகம் பகுதியைச் சேர்ந்த குட்டி (எ)செல்வமணி 20 ஆகியோர் வழிப்பறி உள்ளிட்ட சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் தேவிபட்டினம் போலீசார் கைது செய்து கார், பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


You must be logged in to post a comment.