நேற்று (16.02.19) C5 – கரிமேடு ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மாரியம்மாள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் காளவாசல், பாண்டியன் நகர் சந்திப்பு அருகே சந்தேகப்படுபடியாக HERO HONDA Spl + என்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்த போது (1) தெய்வேந்திரன் 38/19, A.K.கோபாலன் தெரு, ஆரப்பாளையம், மதுரை (2) மகாலிங்கம் 47/19, பைக்காரா, மதுரை ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்யும் தொழில் செய்தது விசாரணையில் தெரியவந்து.
எனவே இருவரும் மீதும் C5 கரிமேடு காவல் ஆய்வாளர் திரு.மன்னவன் அவர்கள் வழக்கு பதிவுசெய்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3.500 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.600/- ம், மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.