நேற்று இரவு (12.02.2019) மதுரை மாவட்டம் புதுக்குளத்தை சேர்ந்த சண்முகசுதா 25/19 என்பவர், திருநெல்வேலியிலிருந்து மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு வந்தவர் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் தனது கைப்பையை கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது அந்த நபர் தனது கைப்பையை திருடிவிட்டு ஓடிவிட்டதாகவும், மேலும் தனது கைப்பையில் HTC DESIRE CELLPHONE-1 , POWER BANK-1, CASH RS.700/ ATM CARDS -3, (SBI CARD-2, UNION BANK ATM CARD-1), NPS CARD-1 ஆகியவைகள் இருந்ததாகவும் அவற்றை கண்டுபிடித்து தரும்படியும் E-3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் திரு. கிருக்ஷ்ணமூர்த்தி திருட்டு வழக்கு பதிவு செய்தார்.
மேலும் நேற்று இரவு E-3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவலர் திரு.விஜய் (1558) எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் கைப்பையை திருடியது சூர்யா 19/19 , த/பெ வேலு, க.எண். 24, பிள்ளையார் கோவில் தெரு, கருவனூர், மதுரை, என தெரியவந்தது எனவே சூர்யாவை E-3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவலர் திரு.விஜய் ஒப்படைத்தார். சார்பு ஆய்வாளர் திரு.கிருக்ஷ்ணமூர்த்தி சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து HTC DESIRE CELLPHONE, POWER BANK-1, CASH RS.700/ ATM CARDS -3, (SBI CARD-2, UNION BANK ATM CARD-1), NPS CARD-1 மதிப்பு 12,200/- ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., காவலர் திரு. விஜய் என்பவரை பாராட்டினார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









