நிலக்கோட்டை அருகே வீட்டை எழுதி வாங்கி செக் மோசடி செய்தவர் கைது. .

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த பாலமுருகன் வயது 40.இவர் பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது தந்தை சுப்புராஜ் நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு த்தட்டு கிராமம், ராஜதாணி கோட்டையிலே உள்ள வீட்டை இதே ஊரைச் சேர்ந்த வைரப்பெருமாள் மகன் வேல்முருகன் வயது 45. இவரிடம் 4 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு வீட்டின் கீழ் பகுதியை ஒத்திவைத்துள்ளார்.

பின்னர் சுப்புராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டை 20 லட்சத்திற்கு பேசுகையில் ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு 18.5.2016 தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் வீட்டை வீட்டை கிரையம் செய்து கொடுத்துள்ளார். ஒத்தி பணம் ரூ.4லட்சமும் கையில் பெற்றுக்கொண்ட ரூ.1 லட்சமும் ஆக மொத்தம் ரூ5 லட்சம் போக மீதி 15 லட்சத்திற்கு 18.10.2016 தேதி பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் ரூபாய் 15 லட்சம் எடுத்துக் கொள்ளும் வகையில் செக் கொடுத்துள்ளார். இந்தப் பணம் வங்கியில் கிடைக்காததால் நேரிலும் செல்போனிலும் பலமுறை வேல்முருகனிடம் பணம் கேட்டு பாலமுருகன் வந்ததாகவும் பணத்தை தருவதற்கு வேல்முருகன் காலம் கடத்தி வந்ததாகவும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 09.08.2018. பாலமுருகன் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வேல்முருகன் கைது செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி உடனே பிடிவாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு வேல்முருகனை கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் கோர்ட் மேஜிஸ்ட்ரேட் ரிஸ்னா பர்வீன முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!