இராமேஸ்வரம் தீவு பகுதிகளில் அரசு மதுக் கடைகள் திறக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் தீவுக்குள் சிலர் பாம்பன், மண்டபம், வாலாந்தரவை பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த பாம்பன் போலீஸார பாம்பன் சாலை பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அது வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதிலிருந்த 3 பேர் முரண்பட்ட பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது 560 மது பாட்டில்களை இருந்தது தெரிந்தது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த தங்கபாண்டி, சுதாகர், இருளவேல் ஆகியோரை கைது செய்தனர். மது பாட்டில்கள் ஏற்றி வந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









