மதுரை, ராஜீவ்காந்தி தெரு, பாக்கியநாதபுரத்தில் வசித்து வரும் ராமர் என்பவருடைய மகன் விஜய் வயது 22/2019 என்பவர் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கிலும் மற்றும், மதுரை சுப்புராமன் தெருவில் வசித்து வரும் மாரிமுத்து என்பவருடைய மகன் தமிழ்செல்வம் என்ற செந்தமிழ்செல்வம் வயது 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளிலும் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி இன்று (22.01.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.