இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு 26.12.2018 ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிசிச்சையில் இருந்த தந்தைக்கு அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 13 வயது மகள் உதவிக்கு இருந்தார். மருத்துவமனை எதிரே உள்ள பேக்கரியில் கடந்த சில தினங்களாக டீ வாங்கச் சென்று வந்தார். அப்போது பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்த பெரியபட்டணம், கிருஷ்ணாபுரம் முத்துச்சாமி மகன் சரவணன் (20) சிறுமி மீது மோகம் ஏற்பட்டது .
இந்நிலையில் நேற்று (01.01.2019) மாலை, சரவணன் பன் வாங்கி கொடுத்து, சிறுமியை வெளியே அழைத்துச் சென்றார். பின்னர் மருத்துவமனை மகளிர் விடுதி ரத்த பரிசோதனை அருகே பராமரிக்கப் படாத கழிப்பறையில்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான். சிறுமியின் தகவல் அடிப்படையில் அவரது சகோதரர் புகாரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சரவணன் காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









