வேலூர் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளையில் ஈடுப்பட்ட பிரபல ரவுடி கொடுங்கந் தாங்கல் பிரபு லாரன்ஸை மேல் பாடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் இலக்குவன் புதியதாக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இருந்த காவல் ஆய்வாளர்கள் கட்டப் பஞ்சாயத்து மணல் கடத்தல், கள்ளச்சாராய மாமூல் மற்றும் சித்தூர் மாவட்டத்திலிருந்து பெரிய கற்சுளை ஏற்றி வரும் லாரிகளிடம் தினமும் மாமூல் வசூலித்து கொள்ளையடித்து வந்தனர்.
இதனிடையில் சென்னையிலிருந்து பணி மாற்றம் பெற்ற ஆய்வாளர் இலக்குவன் அதிரடியாக இறங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு செம்மரக்கட்டை ( 1 1/2 டன்) பறிமுதல் செய்தார். அஅதை தொடர்ந்து இன்று காட்பாடி தாலுகா கொடுங்க
தாங்கலில் வினோத் என்பவரை வழிமறித்து ஒரு ரவுடி தாக்குதல் நடத்துவதாக பொன்னை காவல் ஆய்வாளர் இலக்குவனுக்கு தகவல் கிடைத்தது. உடனே விரைந்து வந்த அவர் அடிதடியில் ஈடுப்பட்ட ரவுடி பிரபு (எ) பிரபு லாரன்ஸ் என்று தெரிய வந்தது. இவன் கொடுக்கந்தாங்கல் மாதா கோவில் ஜெயசீலனின் மகன் பிரபு லாரன்ஸ் (34), இவன் மீது ராணிப்பேட்டை டேவிட் ஆல்பர்ட் என்பவனை பாபு என்பவனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கு, சித்தூரில் கூட்டு கொள்ளை வழக்கு, திருவலம் மற்றும் ஆற்காட்டில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவனை கைது செய்த காவல் ஆய்வாளர் இலக்குவன் உதவி ஆய்வாளர் அண்ணாமலை, ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்,
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









