இன்று (21.11.2018) மீலாது நபி பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து ராமநாதபுரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை அறிவுறுத்தல் படி தசட்ட விரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையை அடுத்த தெற்கூரில் ரோந்து சென்ற போது மது பாட்டில்களுடன் 2 பேர் சிக்கினர். விசாரணையில் தெற்கூரைச் சேர்ந்த மூர்த்தி மகன் பிரபாகரன் 29, முனியாண்டி மகன் பூசைத்துரை 30 என தெரிய வந்தது. கூடுதல் விலைக்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 148 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.


You must be logged in to post a comment.