இலவச மின் இணைப்பிற்கு லஞ்சம்; மின்சார வாரிய JE கைது..

தென்காசி மாவட்டத்தில் விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்துவதற்கு ரூ.7000 பெற்ற மின்சார வாரிய JE தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா, கீழ வீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த K.செல்வகணேஷ் வயது-30, த/பெ கருப்பசாமி என்பவர், அவரது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு EB Pole நட ரூ.24,000 பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கி இருந்ததார். அந்த மின் இணைப்பு சம்மந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வீ.கே.புதூர் EB அலுவலகத்தில் இருந்து JE பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்தாரரிடம் அவரது விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அதன்பேரில் கடந்த 22.11.2025-ஆம் தேதி புகார்தாரர் JE பிரேம் ஆனந்தை சந்தித்து கேட்ட போது நிலத்திற்கான பட்டா, EC, மோட்டார் பில், டெஸ்ட் ரிப்போர்ட், LD அக்ரிமெனட் ஆகிய ஆவணங்கள் மற்றும் ரூபாய் ரூ.10,000 பணத்துடன் வந்து JE பிரேம் ஆனந்தை பார்க்க சொன்னதாகவும், அதன்பேரில் 24.11.2025-ஆம் தேதி சுமார் 12.45 மணியளவில் JE பிரேம் ஆனந்தை பார்த்து ரூ.10,000/- பணம் கொடுக்க முடியாததால் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதாகவும், அப்போது JE ரூ.7,000/- பணம் கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக சொல்லி விட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.

 

அதன்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வீ.கே.புதூர் JE பிரேம் ஆனந்த் என்பவர் மீது 24.11.2025-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் 7,000 பணத்தை புகார்தாரரிடம் கொடுக்க அந்த பணத்துடன் 25.11.2025-ஆம் தேதி புகார்தாரர், JE பிரேம் ஆனந்தை சந்தித்த போது, மேற்படி பணத்தை தனது நண்பர் துரை (வயது-43, த/பெ சுடலைமுத்து தெற்கு கழுநீர்குளம், வீ.கே.புரம்) என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார். அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் JE பிரேம் ஆனந்த் மற்றும் துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுபோல் பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம் என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!