புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை விசாரணையில், மேற்படி கடையில் இருந்து பணத்தை திருடியது ராஜபாளையம், அயன் கொல்லன் கொண்டான் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பொன்ராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த நபரை ராஜபாளையத்தில் வைத்து அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடி சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.